ஆஸ்திரேலிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பன்றிக் குட்டி

Read Time:1 Minute, 38 Second

ஆஸ்திரேலியாவில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் பன்றி குட்டி ஈடுபடுத்தப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் சாரா ப்ளோமேன். இவர் கிட்ஜெட் என்ற பெயர் கொண்ட மூன்று மாத பன்றி குட்டியை வளர்த்து வருகிறார். படுசுட்டியான கிட்ஜெட், இங்குள்ள மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க உதவி வருகிறது. விலங்குகள் பயிற்சி மைய இயக்குனர் லிஸ் ஒயிம் குறிப்பிடுகையில், ‘ இஸ்ரேல் நாட்டில் குண்டுகளை கண்டறிய பன்றிகளை தான் பயன்படுத்துகின்றனர். பன்றிகளுக்கு நன்கு சாப்பிடப் பிடிக்கும்; மண்ணைத் தோண்டப் பிடிக்கும். எனவே, அடிக்கடி மோப்பம் பிடித்தபடி இருக்கும். இதனாலேயே, நாயை விட பன்றியை பழக்கப்படுத்துவது மிகச் சுலபமாகிறது. நாய்களை குட்டியிலேயே பழக்கப்படுத்த வேண்டும். இந்த சிரமம், பன்றிகளிடம் இல்லை’ என்றார்.தன்னுடன் வளரும் குதிரை, ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட அனைத்து பிராணிகளுடனும் இந்த பன்றி குட்டி தோழமையோடும், சுட்டித் தனமாகவும் பழகுவதாக இதன் எஜமானி சாரா தெரிவிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண தண்டனை கைதியை மணக்க அனுமதி
Next post தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்