அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் படகுச்சேவை
Read Time:51 Second
அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைவரையும் 6 படகுச்சேவைகள் மூலம் அங்கிருந்து வெளியே அழைத்து வர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating