நாட்டில் தொடர்ந்தும் சீரற்றகாலநிலை தொடரும்.. வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை
திருகோணமலையிலிருந்து 800கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரண தெரிவித்தார். இந்த தாழமுகத்தினதும் தென்மேல் பருவபெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார். நேற்றுக்காலை 8.30மணியுடன் முடிவுற்ற 24மணிநேர மழைவீழ்ச்சி பதிவின்படி அதிக மழைவீழ்ச்சி நிட்டம்புவவில் 313.6 மிமீற்றர் ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம் அடுத்துவரும் 24மணிநேரத்தில் மேல், தென்மேல், சப்பிரகமுவ மாகாணங்களில் இடி மின்னலுடன் கடும் மழை பெய்ய முடியும் என வானில அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இக்காலப்பகுதியில் இடி மின்னல் மற்றும் அதிக மழை காரணமாக பாதிப்புகளிலிருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறும் அந்நிலையம் நாட்டு மக்களை கேட்டுள்ளது. வானிலையாளரான கயனாஹெந்த வித்தாரண மேலும் தெரிவிக்கையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலை தற்போது இலங்கைக்கு அப்பால் நகர்ந்து வந்துக்n காண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating