மாலைநேர பாராளுமன்ற அமர்வுக்கு ஐ.தே.கட்சி எதிர்ப்பு
மாலைநேர பாராளுமன்ற அமர்வு தொடர்பான யோசனைத் திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது பாராளுமன்ற அமர்வுகள் பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 7.00மணிவரை நடத்தப்பட வேண்டுமென ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. பாராளுமன்றத்தை பின்னேரம் மட்டும் கூட்டும் திட்டத்திற்கு தமது கட்சி அனுமதிக்காது என எதிர்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார் பாராளுமன்ற அமர்வகளில் கலந்துக் கொள்வதற்காக முழுநாள் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறான ஓர் நிலையில் ஏன் மாலை வேளையில் மட்டும் கூடவேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காலை 9.30முதல் மாலை 4.30மணிவரை தற்போது பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடதக்கது இதேவேளை அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்த அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்டுகிறது அரசியல் சாசனத்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் வரையில் இதுகுறித்து தமது கட்சி எவ்வித கருத்துகளையும் வெளியிடாது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்திருத்தம் தொடர்பில் தமது கட்சி ஊடகங்களிலேயே தகவல்களை அறிந்து கொள்வதாகவும் பாராளுமன்றில் இதுகுறித்த யோசனைத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே கருத்துகளை வெளியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
One thought on “மாலைநேர பாராளுமன்ற அமர்வுக்கு ஐ.தே.கட்சி எதிர்ப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
The morning setion is the best as it’s easy to concentrate and more over the participants are fresh.