இங்கிலாந்து நாட்டு ராணி இறந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்!

Read Time:1 Minute, 28 Second

இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவித்தது. நகைச்சுவைக்காக இந்தச் செயலைச் செய்த ‘ரோடியோ ஜாக்கி’ டேனி கெல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான லோக்கல் ரேடியோவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது. மிகப் பிரபலமான ரேடியோ ஒளிபரப்பாளரான டேனி கெல்லி , தனது நிகழ்ச்சியின் இடையில், ஒரு முக்கியமான செய்தி, நமது நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்துவிட்டார் என்று கூறிவிட்டு, ‘God save the Queen’ என்ற இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தை ஒளிபரப்பினார்.

இதனால் மக்கள் அதிர்ந்த நிலையில், இது தவறான தகவல் என்று அந்தச் செய்தியை மறுக்கும் வகையில் இன்னொரு தகவல் ஒலிபரப்பானது.

இந்தச் செயலையடுத்து டேனியை பிபிசி நிறுவனம் இடைநீக்கம் செய்துவிட்டு, அவரது செயலுக்காக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
Next post கேன்ஸ் திரைப்பட விழாவில் ராவணன்..!