இசை ஆல்பத்தில் எம்.ஜி.ஆர். பாடல் ரீமிக்ஸ்..!
ஐஸ்’, ‘யுகா’ படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் அசோக். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளதுபோல் தமிழ் இசை ஆல்பத்துக்கும் வரவேற்பு உள்ளது. அதன் அடிப்படையில் ‘மியூசிக் மசாலா’, ‘இளமை ஜாலி ஜாலி’ என்ற இரண்டு தமிழ் ஆல்பங்கள் தயாராகி உள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த சம்ரோஷ்கான், சிவரஞ்சினி இசை அமைத்துள்ளனர். ஹாரி, பிரசன்னா, பிரேம்ஜி, சாய் சரண் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். எம்.ஜி.ஆர் நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் இடம்பெற்ற ‘மேரே நாம் அப்துல் ரகுமான்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘இளமை ஜாலி ஜாலி’யில் சிங்கப்பூர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடி உள்ளனர். குடியால் ஏற்படும் தீமைபற்றியும் பாடல் உள்ளது. மனோரஞ்சன், கிளாரா, தீபன் இயக்கி உள்ளனர். இதன் வெளியீட்டு விழா சென்னையில் விரைவில் நடக்கிறது. இவ்வாறு அசோக் கூறினார்.
Average Rating