மழை காரணமாக இடம்பெயர்ந்தோர்க்கு பத்து முகாம்கள் அமைப்பு..
Read Time:1 Minute, 14 Second
பல நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கெழும்பு மாவட்டத்தில் நிர்க்கதி நிலைக்கு ஆளானவர்களுக்காக 10முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலைய அதிகாரி எச்.பத்திரன தெரிவித்துள்ளார். தாருஸ்ஸலாம் வித்தியாலயம – கொழும்பு, சுதர்மாராம விஹாரை – கோட்டே, போதிராஜாராம விஹாரை – மொரட்டுவை, விதர்ஷனாராம விஹாரை – மொரட்டுவை, கலபலுவாவ சித்தார்த்த விஹாரை – கடுவலை, களீல் மருந்தகம் – கொழும்பு, பீ.டி.சிறிசேன விளையாட்டரங்கு – கொழும்பு, குணானந்த மாவத்தை – கொழும்பு, 64ஆம் தோட்டம் களஞ்சியம் – கொழும்பு, சிறிமாபுர சனசமூக நிலையம் – கொழும்பு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Average Rating