வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்..!

Read Time:2 Minute, 21 Second

வன்னியில் இறுதிக் கட்டப்போரின் பொழுது இடம்பெயர்ந்துவந்து தற்போது வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களை அடையாளம்காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தின் பொழுது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தவறவிடப்பட்ட அல்லது சிகிச்கைளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பெற்றோர் உறவினர்களை இழந்த சிறுவர்கள் தற்பொழுது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தினால் வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை அடையாளம்காண உதவுமாறு பெற்றோர்கள் உறவினர்களை வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சிறுவர்கள் பலர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் நிலையில் 5வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 26பேரிடம் அவர்களது விபரங்கள் எதனையும் பெற முடியாதுள்ளதாகவும், இதனால் அவர்களது எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைகளை அடையாளம்கண்டு அவர்களது பெற்றோர் தொடர்பான தகவல்களையும் வழங்கும் பட்சத்தில் அச்சிறுவர்களுக்கான எதிர்கால நடவடிக்கைகளை, மேற்கொள்ள இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர்கள், குழந்தைகளை தவறவிட்ட பெற்றோர் அல்லது பெற்றோர் இறந்த நிலையில் குழந்தைகளை தவறவி;ட்ட உறவினர்கள், வவுனியா மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை காலம் தாழ்த்தியதே-அரசு..!
Next post உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை..!