ஓராண்டு நினைவஞ்சலி..! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

Read Time:2 Minute, 38 Second

ஓராண்டு நினைவஞ்சலி
 
அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர்

 
ஓராண்டு ஓடி மறைந்திட்டாலும்
உங்களை தேடுகின்றோமே அப்பா!
உங்கள்  வருகை காணாது
உங்கள் குரல் கேட்காது ஏங்கி
தவிக்கின்றோமே அப்பா! 
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு, விரைந்து
எங்குதான் சென்றீர்களோ அப்பா?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே! 
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ அப்பா?
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது அப்பா
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவீர்களா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கின்றோம்
 ஓராண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு பொரலையை வதிவிடமாகவும் கொண்ட யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளருமான அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், திரு.திருமதி. இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் , திருமதி.புவனேஸ்வரி  அவர்களின் அன்புக் கணவரும் ,  ஜெயபாலன் , ஜெயகுமார் , ஜெசுகந்தன்  , ஜெயகாந்தன்  ,  ஜெயசிலன்  , ஜெயபரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்  ஆவார். அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி எதிர் வரும் 23.12.2010 அன்று அன்னாரி கொழும்பு இல்லத்தில் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதேடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம்..


தகவல் : மனைவி மற்றும் மகன்மார்கள்
[email protected]
                  ஜெயகுமார்  இலங்கை +94773567396
                  ஜெயசிலன்  இலங்கை   +94776366434

                  ஜெயபாலன்  லண்டன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றராக தெரிவு..!
Next post சூரிய குடும்பத்தில் உள்ள என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர்..!