இலங்கையில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றராக தெரிவு..!

Read Time:2 Minute, 7 Second

ஜேர்மனியில் வாழும் பிரபல கோடீஸ்வர வர்த்தகரும் ,இலங்கையருமான 70 வயது உடைய கிருகரன் ஜேர்மனிய செனற்றர்களில் ஒருவராக நியமிக்கப்பட இருக்கின்றார். அந்நாட்டின் இராண்டாவது மிகப் பெரிய நகரமான ஹம்பேர்க் ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொருளாதார விவகாரங்களுக்கான செனற்றராக நியமிக்கப்பட உள்ளார். செனற்றர் அஸ்சல் ஜெடஸ்கோ என்பவரின் இடத்துக்கு இவர் நியமிக்கப்படுகின்றார். வெளிநாடு ஒன்றில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றர் ஆகின்றமை இதுவே முதல் தடவை ஆகும். இவர் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் குடியேறி இருந்தார்.
ஹம்பேர்க்கின் பிரஜையான கிருகரன், தற்போது ஜெர்மனியின் குடியுரிமையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புவதாக ஜெர்மனி ஊடகங்களை மேற்கோள்காட்டி இலங்கை இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் ஜெர்மனியின் பிரஜாவுரிமையை கிருகரன் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜெர்மன் சான்சிலர் மேர்கல் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பிறந்த 70 வயதான கிருகரன் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்று, அதன்பின் அங்கிருந்து ஹம்போர்க்கிற்கு குடிபெயர்ந்தார். விசேட கொள்கலன்களை உற்பத்திசெய்யும் நிறுவனமான பேர்ம் கப்பிட்டல் இன்ரர்மொடலின் உரிமையாளர் கிருகரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்சேகா மீது மேலும் ஒரு வழக்குத் தாக்கல்..!
Next post ஓராண்டு நினைவஞ்சலி..! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)