பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதியின் படத்திற்கு மட்டுமே அனுமதி..!

Read Time:1 Minute, 46 Second

ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் பட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். பதவிப் பிரமாண நிகழ்வு தொடர்பான விளம்பரங்கள், பதாகைகள், துண்டுப் பிரசூரங்கள் ஆகியவற்றில் வேறும் நபர்களின் பெயர்களோ, புகைப்படங்களோ உள்ளடக்கப்படக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களிடையே அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பதவிப் பிரமாண நிகழ்வு ஓர் தேசிய வைபவம் எனவும் ஒரு கட்சிக்கோ தனி நபருக்கோ இதனை உரிமை கோர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகி 22ம் திகதி வரையில் நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம்‐ஜீ.எல்.பீரிஸ்..!
Next post ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்..!