தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி..!

Read Time:2 Minute, 13 Second

தமிழ்நாட்டில் வாழும் ஈழ மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி செய்துள்ளார்.  ஈழத்தில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். அன்மையில் இவர் இலங்கையில் உள்ள முருகன் கோவிலில் தனது குழந்தைக்கு முடி இறக்க செல்ல முயன்றதால் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறாராம் நடிகரான கருணாஸ். எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பி.பி.எஸ் என படித்து வரும் இந்த மாணவர்களுக்கு சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லூரிகளில் இவர்களை படிக்க வைத்தும் வருகிறார்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களை அழைத்து புத்தாடை, இனிப்பு போன்றவற்றை வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.  அப்போது, நடிகர் கருணாஸ் கூறுகையில், இவர்கள் படித்து வேலைக்குப் போன பிறகு இவர்களுடைய சம்பளத் தொகையில் பத்து சதவீதத்தை இதே போன்று ஈழ மாணவர்களின் படிப்புக்கு கொடுக்க வேண்டும்.  இனி ஈழ மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அது அவர்களின் படிப்பாக மட்டும்தான் இருக்கும். எனவேதான் நான் இந்த உதவியை செய்ய முன்வந்தேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ரொக்மெல்ட்’ எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம்..!
Next post 60 வருட தமிழ் மக்களின் போராட்டத்தின் இலக்கு மாகாணசபையல்ல‐இணைந்த மாகாணமே‐த.தே.கூ..!