ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது..!

Read Time:1 Minute, 22 Second

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடைப் பாகங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மாத்தறைப் பிரதேசத்தில் வைத்து இந்த பாரிய ட்ரக் வண்டி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்காக இந்த விசேட மேடை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வாகன விபத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், வீதியை விட்டு கடையொன்றில் மோதுண்டதனால் குறித்த கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறும் பிரதான நிகழ்வுகளுக்கான மேடையின் உதிரிப் பாகங்கள் இந்த ட்ரக் வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் மீட்பு-சந்திரசிறி..!
Next post ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம்-அபிஷேக்பச்சனின் கருத்து..!