ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம்-அபிஷேக்பச்சனின் கருத்து..!

Read Time:1 Minute, 53 Second

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். சன் பிக்சர்ஸின் முதல் படம். படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் ஜோடி சேர்ந்தனர். சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் – ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன் வைத்தார் கரண் ஜோஹர். அதற்கு, `சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்` என்றார் அபிஷேக்! தொடர்ந்து அவர் கூறுகையில், “ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்… இவர்களின் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது..!
Next post ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாடு தென்கொரியாவில் ஆரம்பம்..!