ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!

Read Time:1 Minute, 20 Second

ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐ.பி.ரீ.வி தொழில்நுட்பத்தை கொள்வனவு செய்த போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட ஊழல் மோசடியினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சுங்கத் திணைக்கள சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் ரெலிகொம் நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு;ள்ளதாகவும், இதனால் 324.4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பற்றிய தரவுகளை புலனாய்வுப் பிரிவினருக்கு சமர்ப்பிக்குமாறு தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றனர்–சஜித்..!
Next post உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம்..!