உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம்..!

Read Time:2 Minute, 12 Second
உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றிய வசனம் நீக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் கூறினார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் தீபாவளி அன்று வெளியானது. இந்த படத்தில் கவுண்டர்கள் சமூகம் பற்றி தரக்குறைவாக வசனங்கள் இடம் பெற்றதால் கொங்கு இளைஞர் பேரவையினர் நேற்று முன்தினம் கோவை, சேலம், கரூர் உள்பட முக்கிய மாவட்டங்களில் உத்தமபுத்திரன் படத்தை திரையிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட இந்த சமூகம் உள்ள இடங்களில் உத்தமபுத்திரன் பட காட்சிகள் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நேற்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது. அவர் கூறியதாவது: நாங்கள் எந்த சமூகத்தையும் புண்படுத்த வேண்டும் என்று நினைத்த அந்த வனத்தை வைக்கவில்லை. இந்த வசனங்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 120 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 80 பிரிண்ட்களில் அந்த வசனங்கள் நீக்கப்பட்டது. யு.எப்.ஓ முறையில் வெளியிடப்பட்ட 40 தியேட்டர்களில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அந்த காட்சிகள் நீக்கப்படும். இந்த படம் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள உணர்வுகள் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று எண்ணம் இல்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அந்த காட்சிகள் நீக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர், படதயாரிப்பாளர் மோகன் அப்பாராவ் உடனிருந்தார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!
Next post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதம் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்..!