ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதம் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்..!

Read Time:2 Minute, 0 Second
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் டிசம்பர் மாதம் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வம் டிசம்பர் மாத முதல் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்ற உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதி லண்டனுக்கு விஜயம் செய்ய மாட்டார் என சில ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்ததாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நீதவான் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கருத்துக்களை வெளியிட்ட போதிலும், ஆதாரங்கள் எதனையும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரவு செலவுத் திட்டம் மற்றும் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் இதனால், பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது இழப்புக்களை முழுமையாக தவிர்ப்பதென்பது மிகவும் சிரமமானது எனவும், இலங்கை அரசாங்கம் யுத்த காலத்தில் பொதுமக்கள் இழப்புக்களை மிகவும் வரையறுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களை பலிக்கடாக்களாக பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம்..!
Next post யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் உரிய முறையில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!