தமிழக கவர்னர் பர்னாலா பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு

Read Time:2 Minute, 36 Second

T.Nadu-barnala.jpgதமிழக கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அ.தி. மு.க. ஆட்சியில் கவர்னர் ராம மோகன்ராவ் கவர்னராக இருந்த போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமாக பதவி ஏற்ற உடன் ராம்மோகன்கராவ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பர்னாலா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்- அமைச்சராக பதவி ஏற்றார். இதற்கிடையில் கவர்னரின் பதவி காலம் முடிவடைகிறது. அதனால் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு காலம் அவரது பதவி நீட்டிக்கப்படுகிறது. இதற்கான கோப்புகளை ஜனாதிபதி அப்துல்கலாம் பார்த்து விட்டார்.

இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படுகிறது. 5 ஆண்டு பதவியில் முழுமையாக அவர் நீடிப்பார். இது பற்றி மத்திய அரசு ஏற்கனவே முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. அவரும் கவர்னர் பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு வழங்குவது பற்றி இசைவு அளித்துள்ளார்.

81 வயதான பர்னாலா தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நீண்ட நாள் நண்பராக இருந்தாலும் கூட கடந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் நடுநிலையோடு செயலாற்றி நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் பர்னாலா பஞ்சாபில் உள்ள சிரோமணி அகாலிக்கல் கட்சியை சேர்ந்தவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அக்கட்சி அங்கம் வகித்தது. அந்த கட்சியில் முக்கியமானவராக பர்னாலா செயல்பட்டார்.

பஞ்சாப் முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த பர்னாலா உத்ராஞ்சல், ஆந்திர மாநில கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பொதுமக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.—ரிஎம்விபி தூயவன்.
Next post உலக கோப்பை கால்பந்து: ஈக்வடார் அபார வெற்றி 2-0 கோல்கணக்கில் போலந்தை வீழ்த்தியது