நூலகத்தில் ஒரு வாரம் தூங்கிய பிச்சைக்காரர் வெளியேற்றம்

Read Time:1 Minute, 59 Second

pissai-001லண்டன்: புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்து, நூலகத்தில், ஒரு வாரம் தங்கியிருந்த பிச்சைக்காரர் வெளியேற்றப்பட்டார்.பிரிட்டனின், “கேம்பிரிட்ஜ்’ பல்கலைக் கழக நூலகத்தில், மாணவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி, 24 மணி நேரமும், நூல்கள் வாசிக்க முடியும். இந்த நூலகத்தில், பிச்சைக்காரர் ஒருவர், இரவு நேரங்களில் புத்தகம் வாசிப்பது போல், ஒரு வாரம், அந்நூலகத்தில், தூங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆரம்பத்தில், மாணவர்களுக்கு, அவர் மீது, சந்தேகம் வரவில்லை. வெளியில் இருந்து தின்பண்டங்களை வாங்கி வந்து, வரலாற்று புத்தகங்களை வாசிப்பது போல் அவர் பாவனை செய்ததை சிலர் கவனித்தனர். பெரும்பாலான நேரங்களில் அவர், தூங்கிக் கொண்டே இருந்தது, மாணவர்களிடையே சந்தேகத்தை கிளப்பியது. தொடர்ந்து ஒரே உடையை அவர் அணிந்து இருந்ததால், அவர் மாணவர் இல்லை என, கருதிய அவர்கள், நூலக நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர்.அவரிடம் அடையாள அட்டை ஏதும் இல்லை என்பதை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். பின், விசாரணையில், அவர் ஒரு பிச்சைக்காரர் என்ற உண்மை தெரிய வந்தது. உடனே அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.”இரவு நேரங்களில் குளிரிலிருந்து தப்ப, கதகதப்பான இடமாக, நூலகத்தை அவர் பயன்படுத்தி இருக்கலாம்’ என, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விடயத்தில் ஐ.நாவின் செயற்பாடு குறித்த அறிக்கைக்கு நவிப்பிள்ளை வரவேற்பு
Next post இரு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை கனடாவில் மறுப்பு