கூல் ட்ரிங்கில் மயக்க மருந்து கொடுத்தே என் மகள் கடத்தப்பட்டாள்! -நடிகை கவிதா

Read Time:3 Minute, 35 Second

actress-kavithaகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கார் டிரைவர் ராஜ்குமார் தனது மகள் மாதுரியை கடத்திவிட்டதாக நடிகை கவிதா தெரிவித்துள்ளார். பிஸ்தா, அவள் வருவாளா, சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளவர் கவிதா. அவர் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் மாதுரி(21) எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சங்கரப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரை ஹைதராபாத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த திருமணம் குறித்து கவிதா கூறுகையில், என் மகளுக்கும், கார் டிரைவர் ராஜ்குமாருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை. கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது.

ராஜ்குமார் என்னுடைய கார் டிரைவர் கிடையாது. நாங்கல் செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியருப்பு ஒன்றில் 3வது மாடியில் வசித்து வருகிறோம்.

எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள அலுவலகம் ஒன்றில் ராஜ்குமார் கார் டிரைவராக இருந்தான். அப்படி தான் எங்களுக்கு அறிமுகம் ஆனான்.

கார் பார்க்கிங்கில் ஒரு ஹலோ சொல்வதோடு சரி. அவனுக்கும் எங்களுக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது. அவனை என் மகள் காதலிக்கவும் இல்லை.

சம்பவம் நடந்த அன்று என் மகள் அருகில் உள்ள கடைக்கு சென்றாள். அப்போது ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து என் மகளுக்கு கொடுத்துள்ளான். அதை குடித்த என் மகள் மயங்கிவிடவே அவளை ராஜ்குமார் ஆட்டோவில் கடத்திவிட்டான்.

கோவிலில் வைத்து அவன் என் மகள் கழுத்தில் மாலை போட்டபோது போலீசார் அவனைப் பிடித்துவிட்டனர். கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து என் கணவர் தசரதராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ராஜ்குமாரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். போலீசார் அவனிடம் இருந்து எங்கள் மகளை மீட்டு எங்ளிடம் ஒப்படைத்துவிட்டனர்.

ராஜ்குமார் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்தவன் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவன் பெண்களை கடத்தி விற்பவன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனிடம் குஜராத் செல்லும் ரயில் டிக்கெட்டுகள் இருந்துள்ளன என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் புலி உறுப்பினருக்கு கூடைப்பந்து அணியில் வாய்ப்பு
Next post அமெரிக்க தீர்மானம் நிறைவேறினாலும் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை -அரியநேத்திரன் எம்.பி