தெற்காசியாவிலேயே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலை

Read Time:2 Minute, 2 Second

buddhதெற்காசியாவிலே மிகப்பெரிய புத்த பெருமானின் மெழுகுச் சிலையொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெசாக் போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொட்டாவ மாகும்புர புரான விகாரைக்கு அருகிலுள்ள எழில்மிகு வயல்வெளிக்கு மத்தியில் 180 அடி உயரத்தில் இந்த மெழுகுச்சிலை அமைக்கப்படவுள்ளது. தென் மாகாண அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்துக்கு முன்பாக மாகும்புர நுழைவாயிலில் இந்த மெழுகுச் சிலையை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. 2600வது சம்புத் தத்துவ ஜயந்தியையொட்டி நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த அழகான மெழுகுசிலை சிங்கள கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த புத்த பெருமானின் மெழுகுச்சிலை அமைக்கப்படுவதால் நாட்டுக்கும், இலங்கையிலுள்ள பௌத்த பீடங்களுக்கும் பெரும் புண்ணியமாகும் என்பதால், ஜனாதிபதியினால் 10 இலட்சம் ரூபா இதன் நிர்மாணப் பணிக்காக அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மெழுகுச்சிலை அமைக்கப்படுவ தற்கு ஏதுவாக இந்த குறிப்பிட்ட இடத்திலே 2600 புத்த பகவானின் சின்னஞ்சிறிய சிலைகளும் அமைக்கப்படவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பி.பி.சி இலங்கை ஒலிபரப்பு இடைநிறுத்தம்
Next post அரசாங்க கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது -இரா. சம்பந்தன்