பிரேசில் கொரியா வெற்றி: பிரான்ஸ்-சுவிஸ் டிரா

Read Time:2 Minute, 24 Second

france-swiss-0614.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நடப்பு சாம்பியனான பிரேசில் 1:0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை போராடி வென்றது. அதே போல டோகோ அணியை தென் கொரியா 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால், பிரான்ஸ்சுவிட்சர்லாந்து இடையிலான போட்டி கோல் எதுவும் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.

உலக சாம்பியனான பிரேசிலை குரேஷிய அணி பாடாய் படுத்திவிட்டது. பிரேசில் அணியால் நெடு நேரம் கோல் ஏதும் போட முடியாத அளவுக்கு குரேஷிய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர்.

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் தான் பிரேசில் வீரர் காகா ஒரு கோல் அடித்தார். ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் யாராலும் கோல் போட முடியவில்லை. இதையடுத்து பிரேசில் ஒரு வழியாக வெற்றி பெற்றது. பிரேசில் அணியில் ஆட்டத்தை உலகமே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை.

பெர்லின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண 70,000 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

பிரான்ஸ்சுவிஸ் டிரா:
ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் சுவிட்சர்லாந்தும் மோதின. ஆனால், இருவருமே மிகச் சிறப்பாக டிபென்ஸ் ஆடியதால் இருவராலும் கடைசி வரை கோல் போட முடியவில்லை. இதையடுத்து அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்த ஆட்டத்தில் பிரான்ஸை விட சுவிஸ் அணியின் விளையாட்டு மிகச் சிறப்பாக இருந்தது.

இன்னொரு போட்டியில் டோகோ அணியை தென் கொரியா 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு
Next post கொழும்பு நகரினுள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவல்