சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..!!

Read Time:2 Minute, 6 Second

images (9)சிங்கம் படத்திற்கு பல ஊர்களுக்கு சென்று படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார் சூர்யா. அதைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபல நடிகரான ஷாரூக்கானும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தினார். அதனால் இப்போது தமிழ்நாட்டிலுள்ள ஹீரோக்களையும் படம் ரிலீசாவதற்கு பத்து நாளைக்கு முன்பே ஊர் ஊராக சென்று ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று படாதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், செப்டம்பர் 6-ந்தேதி, வெளியாகயிருக்கும் மதகஜராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களுக்காக அந்த படங்களின் ஹீரோக்களான விஷால்-சிவகார்த்திகேயன் இருவருமே ஊர் ஊராக சென்று படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்காக சேலம், திருச்சி, கோவை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு சென்று ப்ரமோஷன் வேலைகளை பட நாயகியுடன் கவனித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதேபோல் விஷாலும், சென்னையைத் தொடர்ந்து கொச்சின், ஐதராபாத், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு பட நாயகி வரலட்சுமியுடன் இணைந்து ப்ரமோஷன் வேலைகள் சுழன்று கொண்டிருக்கிறார். இப்படி ஹீரோக்களே படத்தின் வெற்றிக்காக இறங்கி வேலை செய்வதால் சம்பந்தப்பட்ட படாதிபதிகள் மத்தியில் வெற்றிக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும்;- நவநீதம்பிள்ளை..!!
Next post வெளிநாட்டு விசாவுடன் வடக்கு செல்வோரை கண்காணிக்குமாறு கோரிக்கை..!!