வெளிநாட்டு விசாவுடன் வடக்கு செல்வோரை கண்காணிக்குமாறு கோரிக்கை..!!

Read Time:3 Minute, 14 Second

download (4)இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்தியாவில் இருந்து வர்த்தகம் என்ற போர்வையில் வடக்கிற்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.

அதன்படி இவர்கள் வடக்கின் நிலவரங்களை புலனாய்வு செய்து வருவதாகவே சந்தேகம் எழுந்துள்ளது. இதேவேளை, வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைக் கொண்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் அன்றாடம் ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணிக்கின்றனர்.

இவ்வாறு நாட்டுக்குள் உட்பிரவேசிக்கும் வெளிநாட்டுக் குழுவினர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் எதிராக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனினும் வடக்குக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்கு செல்கிறார்கள், அங்கு என்ன விடயங்களில் ஈடுபடுகின்றனர்  என்பது தொடர்பில் விரிவாக தேடியறிய வேண்டும்.

வர்த்தக நோக்கத்துக்கென வடக்குக்கு வருகை தரும் இந்தியர்கள், சுற்றுலா விசாவிலேயே வருகின்றனர். அவ்வாறான விசாவில் வருபவர்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இருப்பினும், வடக்கில் பெண்களைக் கவரக்கூடிய பொருட்களைக் கொண்டுவந்து வர்த்தக நோக்கம் என்ற பெயரில் சுற்றித் திரிகின்றனர். அதற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருக்கக் கூடிய காலத்தையும் கடந்தும் தங்கியிருக்கின்றனர்.

இதனால், இவர்கள் தொடர்பில் பாரியதொரு சந்தேகம் எழுந்துள்ளது.  எனவே வெளிநாட்டு வீசாவில் வடக்கிற்கு நுழைபவர்கள் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து செல்லும் போது மிகக் கவனமாக சோதனையிடப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த தினங்களுக்கு மேலாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..!!
Next post சிறுவனை கடத்தி, இரு கண்களின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டிய கொடூரம்..!!