சிறுவனை கடத்தி, இரு கண்களின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டிய கொடூரம்..!!

Read Time:2 Minute, 8 Second

1887MOR-eyes-சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணைத் தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிர வைத்திருக்கிறது.

சீனாவின் ஷாங்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனைக் காணவில்லை.

அவன் காணாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து அவன் முகம் முழுவதும் இரத்தம் தோய்ந்த நிலையில் அலறித் துடித்துக் கொண்டிருந்ததை பெற்றோர் பார்த்திருக்கின்றனர்.

இதைக் கண்டு அலறிய பெற்றோர் அவனைத் தூக்கிப் பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர். அவனது இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சிறுவனை வைத்தியசாலைக்கு அனுப்பிய கையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்திருக்கின்றனர்.

அந்த பெற்றோருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவனின் இரண்டு கண்களும் தோண்டி வீசப்பட்டிருந்தமை தெரியவந்தது.

சிறுவனின் தோண்டி எடுக்கப்பட்ட கண்களுடன் வைத்தியசாலைக்கு பதறிப் போன பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் சொன்ன விடயம் மென்மேலும் அதிரவைத்தது.

அதாவது சிறுவனை கடத்தி கண்ணைத் தோண்டி எடுத்த கும்பல், சிறுவனின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்து தப்பியிருக்கின்றது என்றார்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டு விசாவுடன் வடக்கு செல்வோரை கண்காணிக்குமாறு கோரிக்கை..!!
Next post ஒட்டிப் பிறந்த் இரட்டைக் குழந்தைகள் பிரித்தெடுப்பு..!!