இலங்கை கடற்படை கப்பல் ஒன்று, இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கிறது!

Read Time:2 Minute, 42 Second

slk.lanka-navyதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்று தினமும் செய்தி வெளியாகிறது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதை தடுத்து நிறுத்துங்கள் என, முதல்வர் ஜெயலலிதா வாரம் ஒருமுறையாவது டில்லிக்கு கடிதம் எழுதுகிறார்.

இப்படி புகார் மேல் புகார் கூறப்படும் இலங்கை கடற்படையின் கப்பல் ‘SLNS சாகர’, இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை, தமிழக மீனவர்களை பிடித்துச் செல்ல ராமேஸ்வரம் அருகேயுள்ள இந்திய கடல் பகுதியில் நடமாடுகிறதோ, அந்த இலங்கை கடற்படை கப்பல்?

இல்லிங்க. கோவா கரையோரமாக இந்தியக் கடலில் நிற்கிறது, இலங்கை கடற்படையின் கப்பல்.

இந்திய கடற்படையின் அழைப்பை ஏற்று, கோவா சென்றுள்ளது இலங்கை கடற்படை. அங்கு இந்திய – இலங்கை கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். “SLINEX 2013″ என்ற பெயருடைய இந்த கடல் பயிற்சி, நேற்று ஆரம்பமானது. வரும் 8-ம் தேதி, வெள்ளிக்கிழமை வரை கோவா கடல் பகுதியில் நடக்கிறது.

இந்த பயிற்சிக்காகதான் இலங்கை கடற்படை கப்பல் ‘SLNS சாகர’ இந்தியா வந்துள்ளது. இந்திய கடற்படை சார்பில் ‘INS தெக்’ என்ற கப்பல் பயிற்சியில் கலந்து கொள்கிறது. இரு நாடுகளின் கடற்படைகளும் ஒன்றிணைந்து Maritime interdiction operations, Search and Rescue (SAR) demonstrations, Visit Board Search and Seize (VBSS) operations, Asymmetric threat exercises ஆகிய பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இதில் கலந்துகொள்ள இலங்கை கடற்படையினர், ரியர் அட்மிரல் நீல் ரொசாரியோ என்பவரின் தலைமையில் வந்துள்ளனர்.

“ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்” என்ற செய்தி, இன்று தமிழக மீடியாக்களில் பரபரப்பாக அடிபடுகிறது.

ஒரு சந்தேகம். கோவா, போத்துக்கல் நாட்டிலா இருக்கிறது? அல்லது தமிழகம், இந்தியாவில் இல்லையா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர்..!!
Next post (PHOTOS) அழகுராணிப் போட்டியில் ரெஸ்லிங் வீராங்கனை