(PHOTOS) அழகுராணிப் போட்டியில் ரெஸ்லிங் வீராங்கனை

Read Time:2 Minute, 48 Second

2839wresling-1இவ்­வ­ருடம் பிரித்­தா­னிய அழ­கு­ராணி போட்­டியில் ரெஸ்லிங் (மல்­யுத்த) வீராங்­க­னை­யொ­ரு­வரும் இப்­போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

லோ பல்லார்ட் எனும் இந்த ரெஸ்லிங் வீராங்­கனை இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள ‘மிஸ் கிரேட் பிரிட்டன்’ அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

26 வய­தான லோ பலார்ட், கடந்த 3 வரு­டங்­க­ளாக பளு­தூக்கும் பயிற்­சி­களை மேற்­கொள்­வ­துடன் ரெஸ்லிங் போட்­டி­களில் பங்­கு­பற்றி வரு­கிறார்.

அதே­வேளை தற்­போது ‘மிஸ் பேர்­ச­னா­லிட்டி ஒவ் கிரேட் பிரிட்டன்’ எனும் அழ­கு­ராணி போட்­டி­யிலும் அவர் சம்­பி­ய­னாக விளங்­கு­கிறார். இதன் மூலம் எதிர்­வரும் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள மிஸ் கிரேட் பிரிட்டன் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு அவர் தெரி­வானார்.

5 அடி 9 அங்­குல உய­ர­மான லோ பலார்ட், தனது ஆண்­க­ளு­டனும் ரெஸ்லிங் போட்­டியில் பங்­கு­பற்­று­கிறார்.

‘நான் ஒவ்­வொரு ஞாயிறு தினத்­திலும் ரெஸ்­லிங்கில் ஈடு­ப­டு­கிறேன். 16.5 ஸ்டோன் எடை­யுடை ஆண்­களை தூக்கி தரையில் அடி­ப்பதில் எக்கு எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை’ என்­கிறார் லோ பலார்ட்.

‘மிஸ் பேர்­ச­னா­லிட்டி ஒவ் கிரேட் பிரிட்டன்’ போட்­டியில் வென்­றதன் மூலம் நான் மிஸ் கிரேட் பிரிட்டன் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு தகு­தி­பெற்றேன்.

நான் மிகவும் அதிர்ஷ்­ட­சாலி என எண்­ணு­கிறேன். ஏனெனில் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்­கான வய­தெல்லை 27 ஆகும். எனது 27 ஆவது பிறந்த தினத்­துக்கு ஒருநாள் முன்­ன­தாக இப்­போட்டி நடை­பெ­று­கி­றது.

நான் ரெஸ்லிங் வீராங்­க­னை­யாக விளங்கும் நிலை­யிலும் பிரித்தானிய அழகுராணி போட்டியில் சாதிக்க முடியும் என்பதை மக்கள் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்’ என லோ பலார்ட் தெரிவித்துள்ளார்.

2839wresling-1
2839wresling-2
2839wresling-3

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை கடற்படை கப்பல் ஒன்று, இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கிறது!
Next post லொறியில் இருந்து 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்பு