இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுடன் நிச்சயதார்த்தம்

Read Time:1 Minute, 42 Second

3165_newsthumb_KArthikஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக் மற்றும் புகழ்பெற்ற இந்தியாவின் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளதாக இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

இவர்களது நிச்சியதார்த்தம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வெற்றியின் பின்னர் இந்திய அணியில் இடம்பெறாத தினேஷ் கார்த்திக் தற்போது தமிழக அணி சார்பாக சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.

தினேஷ் கார்த்திக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்த நிதிகாவிடமிருந்து விவாகரத்துப் பெற்றார் இந்நிலையிலேயே ஸ்குவாஷ் வீராங்கனையுடன் இவருக்கு நிச்சயதார்தம் இடம்பெற்றுள்ளது.

ஒரே உடற்பயிற்சி நிபுணரிடம் பயிற்சிகளை மேற்கொள்ளும் போதே இவர்களிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கும் போது நிச்சயதார்த்தம் செய்து அதற்கு முற்புள்ளி வைத்துள்ளனர் கார்த்திக் – தீபாக ஜோடி.

3165_newsthumb_KArthik

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி
Next post (PHOTOS) கராத்தே வகுப்பு நடத்தும் 8 மாத கர்ப்பிணி…