By 30 November 2013 0 Comments

‘ஹலோ.. சொல்லி பணம் பறிக்கும் திருவிளையாடல்!! -எம்.எப்.எம்.பஸீர்

019அன்று ஒக்­டோபர் மாதம் 12ஆம் திகதி…. நுகே­கொடை பிர­தே­சத்தை சேர்ந்த விரி­வு­ரை­யா­ளரின் வீடது. வீட்டில் அவ­ரது மனைவி மட்­டுமே இருந்தார். அப்­போது தான் அந்த தொலை­பேசி அழைப்பு வந்­தது. 

‘ஹலோ…. நான் பொத்­துவில் பொலிஸ் பரி­சோ­தகர் அஜித்­கு­மார பிடி­கல கதைக்­கின்றேன். உமது கணவர் எங்கே? என வின­வி­யது அந்த கம்­பீ­ர­மான ஆண் குரல்.

தனது கணவர் வெளி­நாட்டு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு சென்­றுள்­ள­தா­கவும் சில நாட்­களில் மீண்டும் வருவார் எனவும் விரி­வு­ரை­யா­ளரின் மனைவி பதில் கூறு­வ­தற்குள் பொத்­துவில் பொலிஸ் பரி­சோ­த­க­ராக தன்னை அறி­முகம் செய்து கொண்ட அந்த நபர் மீண்டும் கதைக்கத் தொடங்­கினார்.

‘சரி உங்கள் கணவர் தொடர்பில் ஒரு பிரச்­சினை உள்­ளது. அது தொடர்பில் விசா­ரணை செய்ய அவர் அவ­சி­ய­மா­கிறார்’ நபர் கூறி­ய­துமே விரி­வு­ரை­யா­ளரின் மனைவி பதறிப் போனார்.


எனினும் அந்த மர்ம பொலிஸ் பரி­சோ­தகர் தனது கதையை தொடர்ந்தார் ‘தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் உறுப்­பி­ன­ரான முருகேஷ் என்­ப­வரை நாம் கைது செய்து தடுப்பில் வைத்து விசா­ரித்து வரு­கிறோம். அவர் கொடுத்­துள்ள வாக்குமூலத்தில் உமது கணவர் தன்­னுடன் கொடுக்கல் வாங்­கல்­களை மேற்­கொண்­ட­தாக குறிப்­பிட்­டுள்ளார். எல்.ரீ.ரீ.ஈ.யுடன் தொடர்பை பேணு­வது கொஞ்சம் பெரிய பிரச்­சினை தான்.

முரு­கேஷின் கைய­டக்க தொலை­பே­சியை பரீட்­சித்த போது, உமது கண­வரின் இலக்­க­மான 077 xxxxxxx எனும்   இலக்­கத்­துடன் சந்­தேக நபர் தொடர்­பி­லி­ருந்­துள்ளார். அதனால் உமது கண­வரை கண்­டிப்­பாக விசா­ரணை செய்ய வேண்டி­யுள்­ளது. அவர் எப்­போது வருவார்? என மர்ம பொலிஸ் பரி­சோ­தகர் வினவ மனைவி அதிர்ச்­சியில் உறைந்து போனார்.

இன்னும் சில நாட்­களில் தனது கணவர் நாடு திரும்பி விடுவார் என அதிர்ச்­சிக்கு மத்­தியில் பதி­ல­ளித்த விரி­வு­ரை­யா­ளரின் மனை­விக்கு அப்­ப­டி­யாயின் அவரை நாட்­டினுள் வரும் போதே கைது செய்ய வேண்டி வரும் என்ற மர்ம பொலிஸ் பரி­சோ­த­கரின் பதில் நிலை குலைய வைத்­தது.

இதன்­போதே விரி­வு­ரை­யா­ளரின் மனைவி பயத்­துடன் தான் தற்­போது என்ன செய்­வது என அப்­பாவித்தன­மாக வின­வி­யுள்ளார்.

தொலை­பே­சியில் மறு­மு­னையில் இருந்த மர்ம பொலிஸ் பரி­சோ­தகர் ‘சரி…மெடம்… உங்­க­ளுக்­காக ஒரு உதவி செய்­யலாம். இந்த பிரச்­சி­னையை முழு­மை­யாக நாங்கள் தான் கையாள்­கிறோம். இதனை நாங்கள் 6 பேர் கொண்ட குழுவே விசா­ரிக்­கிறோம். இப்­போது பைல்கள் எங்­க­ளிடம் தான் உள்­ளன. பிரச்­சி­னை­யி­லி­ருந்து மீள வேண்­டு­மாயின் உங்கள் கண­வரின் பெயரை என்னால் பைலி­லி­ருந்து நீக்க முடியும். இது இர­க­சி­ய­மா­னது எனினும் எங்­களை கொஞ்சம் கவ­னிக்க வேண்டும் என முடித்தார்.

இத­னை­ய­டுத்து விரி­வு­ரை­யா­ளரின் மனைவி, எவ்­வ­ளவு தொகை என வினவ தனது கணக்கை கூறத் தொடங்­கினார் அந்த மர்ம பொலிஸ் பரி­சோ­தகர்.  நாங்கள் 6 பேர் உள்ளோம். எல்­லோ­ருக்கும் கொடுக்க வேண்டி வரும். எனக்கு 40 தேவை. ஏனை­யோ­ருக்கு 20- வீதம் மொத்தம் ஒரு இலட்­சத்து 40ஆயிரம் வேண்டும். அவ­ச­ர­மாக தந்தால் மட்­டுமே எங்­களால் செய்ய முடியும் மிக அவ­ச­ர­மாக அட்வான்ஸ் செலுத்­தினால் சரி’ என்றார்.

உடனே வங்கிக் கணக்­கி­லக்­கத்­தினை கேட்டுக் கொண்ட விரி­வு­ரை­யா­ளரின் மனைவி உட­ன­டி­யாக 40ஆயிரம் ரூபாவை குறித்த கணக்கில் வைப்­பி­லிட்­ட­துடன் மறுநாள் தனது காதணி மற்றும் வளையல்­களை அடகு வைத்து மீத­முள்ள  ஒரு  இலட்­சத்தில்  85ஆயிரம் ரூபாவை  செலுத்­தி­யுள்ளார்.

நான் செலுத்­திய பணம் கிடைத்­ததா என அறிந்து கொள்ள விரி­வு­ரை­யா­ளரின் மனைவி தன்னை தொடர்பு கொண்ட அந்த இலக்­கத்தை தொடர்பு கொள்ள முயற்­சித்த போது அந்த இலக்­கமோ தொடர்ந்தும் செய­லி­ழந்­தி­ருந்­தது. இதனைய­டுத்து  சந்­தேகம்  கொண்ட  விரி­வு­ரை­யா­ளரின் மனைவி பொலிஸில் அது குறித்து முறை­யிட்­டுள்ளார்.

இதேபோன்று  நவம்பர்  நான்காம் திகதி கோட்டே, ஒப­ஹேன வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வைத்­தியர் ஒரு­வ­ருக்கு அழைப்­பொன்று வந்­தது.

‘ஹலோ…நான்  பொத்­துவில் பொலிஸ் பரி­சோ­தகர்  அஜித் குமார பிடி­கல கதைக்­கிறேன் .படகில் அவுஸ்­தி­ரே­லியா செல்ல முயன்ற தமி­ழீழ விடு­தலை புலி உறுப்­பினர் ஒரு­வரை நாம் கைது செய்­துள்ளோம். அவ­ரி­ட­மி­ருந்து வலி நிவாரண  மருந்­து­களை  நாம் மீட்­டுள்ளோம். அந்த மருந்­து­களை உறுதி செய்­துள்ள தகவல் அடங்­கிய மருந்து துண்டை நீரே வழங்­கி­யுள்ளீர்.

1988இல் இந்த மருந்து துண்டை நீர் எழு­தி­யுள்ளீர் தமி­ழீழ விடு­தலை புலி­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் உம்மை கைது செய்ய வேண்­டி­யுள்­ளது. அதற்­கான மாஜிஸ்­திரேட் ஆணையை பெற்­றுக்­கொள்ள நடவடிக்கை  எடுத்­துள்ளோம் என அந்த  மர்ம பொலிஸ் பரி­சோ­தகர் தெரி­விக்க அதனை வைத்­தியர் முழு­மை­யாக நிரா­க­ரித்­துள்ளார்.

எனினும்  மர்ம பொலிஸ் பரி­சோ­தகர் புலி உறுப்­பி­ன­ராக  கைது செய்­யப்­பட்­ட­வ­ருக்கு  சிகிச்சையளிக்க உத­வி­ய­வ­ருக்கு சிங்­கள பெண் என கூறி­யதும் வைத்­தியர் வாய­டைத்து போயுள்ளார்.

இந்த பிரச்­சி­னை­யி­லி­ருந்து மீளு­வ­தற்கு விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் குழு­வி­னரை கவ­னிக்­கு­மாறு தமது பாணியில் குறிப்­பிட்ட அந்த மர்ம பொலிஸ் பரி­சோ­தகர் 6 இலட்சம் ரூபாவை தமக்கு வழங்­கு­மாறு கேட்­டுள்ளார்.

இதனால் அச்­ச­ம­டைந்த வைத்­தியர் உட­ன­டி­யாக பெல­வத்­தை­யி­லுள்ள அரச வங்­கி­யொன்­றுக்கு சென்று தனது நிலை­யான வைப்­பி­லி­ருந்து மூன்று தவ­ணை­களில் பணத்தை பெற்று 5 இலட்சம் ரூபாவை கப்­ப­மாக செலுத்­தி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் இதனால் பெரும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த வைத்­தியர் இது தொடர்பில் தனது உற­வினர் ஒரு­வ­ரிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்தே விடயம் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இது ஒரு மோசடி என்­பதை தெரிந்த அந்த உற­வி­னரின் உத­வி­யுடன் கொழும்பு தெற்­குக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்­க­விடம் இது தொடர்பில் முறை­யிட்­டுள்ளார்.

ஏற்­க­னவே விரி­வு­ரை­யா­ளரின் மனைவி பொலிஸில் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டையும் இந்த முறைப்­பாட்­டையும் இணைத்துப் பார்த்த பொலிஸார் பொத்­துவில் பொலிஸ் பரி­சோ­தகர் அஜித்­கு­மார பிடி­கல என்ற பெயரில் யாரோ ஒருவரோ அல்­லது ஒரு குழுவோ இதனை செய்­கின்­றனர் என்ற அனு­மா­னத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

விசா­ர­ணைகள் மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிமல் கருணா ரத்­னவின் கீழ் நிய­மிக்­கப்­பட்ட குழு­வுக்கு வழங்­கப்­பட்­டது. இதனை தொடர்ந்து மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் துரித கதியில் செயற்­ப­ட­லா­யினர்.

குறித்த விடயம் தொடர்பில் கடு­வலை மற்றும் கங்­கொ­ட­வில நீதிவான் நீதி­மன்­றங்­களில் விஷேட அறிக்­கை­யொன்­றினை சமர்ப்­பித்த மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார், கப்பம் கோரப்­பட்ட தொலை­பேசி இலக்­கங்கள்  குறித்­தான முழு­மை­யான விப­ரங்­களை அடங்­கிய தக­வல்­களை தொலை­பேசி சேவை நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­டனர்.

எங்­கி­ருந்து யார்? எப்­போது போன்ற கப்­பக்­கா­ரர்கள் தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு பதில் தேடும் முக­மா­கவே இந்த தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில் பொலிஸார் முழு­மை­யான தக­வல்­களை சேக­ரித்­தனர்.  அத்­துடன் சீ.சீ.டீ. கமரா பதி­வுகள் சில­வற்­றையும் நீதி­மன்ற அனு­ம­தியைப் பெற்று விசா­ர­ணைப் பொலிஸ் குழு பரீட்­சித்­தது.

இதன் விளைவாக மேற்­கொள்­ளப்­பட்ட விசேட நட­வ­டிக்­கையில் கடந்த புத­னன்று பத்­த­ர­முல்­லையில் பொருள் அங்­கா­டி­யொன்றில் வைத்து பெண்­ணொ­ரு­வ­ரையும் ஹோமா­கம மாவத்­தக பிர­தே­சத்தில் வைத்து மற்­று­மொரு பெண்­ணையும் மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்­தனர்.

இத­னை­ய­டுத்து தொலை­பே­சியில் மிரட்டும் இந்த கண்­ணா­மூச்சி விளை­யாட்டு தொடர்பில் பல தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது.

இந்த கண்­ணா­மூச்சி விளை­யாட்டின் பிர­தான சந்­தேக நபர் பல­பிட்­டிய பிர­தே­சத்தை சேர்ந்­தவர் என்­பதை விசா­ர­ணை­களில் தெரிந்து கொண்ட பொலிஸார் அவ­ரையும் கைது செய்ய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளனர் சந்­தேக நபர் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் மிரிஹான விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவு அவரை கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இத­னை­விட கைது செய்­யப்­பட்­டுள்ள இரு பெண்­களும் வழங்­கி­யுள்ள தக­வலின் படி மற்­று­மொரு பெண்­ணையும் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் பொலிஸார் இறங்­கி­யுள்­ளனர்.

பிர­தான சந்­தேக நப­ராக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள பலப்­பிட்­டியவைச் சேர்ந்த நபர் மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட நாட்டின் பல பாகங்­களில் இடம்­பெற்ற வாகனக் கொள்ளை உள்­ளிட்ட பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சுமார் 10 வாகனக் கொள்­ளைகள் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்பு பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் சுமார் 500 பேர் வரையில் இந்த குழு­வி­னரால் தொலை­பே­சியில் இவ்­வாறு மிரட்­டப்­பட்டு உள்­ள­தாக சந்­தே­கிக்கும் பொலிஸார் அதன் மூலம் பல இலட்­சங்­களை இவர்கள் சுருட்டி இருக்­கலாம் எனவும் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் இது தொடர்பில் 50 முறைப்­பா­டுகள் வரையில் மட்­டுமே கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பெரும்­பா­லா­ன­வர்கள் பயம் மற்றும் வெட்கம் கார­ண­மாக பொலிஸில் முறைப்­பா­ட­ளிக்க முன்­வ­ரு­வ­தில்­லை­யென விசா­ரணைப் பிரி­வினர் மேலும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இவ்­வா­றான ஹலோ…. கப்பம் காரர்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இருப்பின் அது தொடர்பில் மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்பு பிரிவு பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­து­மாறு மிரி­ஹான விஷேட விசா­ரணைப் பிரி­வினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளான இரு பெண்­களும் கடு­வலை பிர­தான நீதிவான் வஸந்த ஜின­தாஸ முன்­னி­லையில் ஆஜர்ப்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் டிசெம்பர் ௫ ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸாரால் சந்­தேக நபர்கள் கப்­ப­மாக பெற்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஒரு இலட்­சத்து 40 ஆயிரம் ரூபா பணம், போலி அடை­யாள அட்டை பல வங்கிக் கணக்கு புத்­த­கங்கள், இரண்டு கைய­டக்க தொலை­பே­சிகள் என்­பன பொலிஸ் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்டு ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

பொத்துவில் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் குமார பிடி­கல என்ற பெயரில் பிர­தான சந்­தேக நபரே அப்­பா­வி­களை தொடர்பு கொண்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார் கைது செய்­யப்­பட்ட இரு பெண்கள் உள்­ளிட்­ட­வர்கள் இந்த கப்பம் பெறும் குழுவில் உறுப்­பி­னர்கள் என தெரி­விக்­கின்­றனர்.

பயங்­க­ர­வாத விசா­ரணை என்ற பெயரில் அப்­பா­வி­களை அச்­சு­றுத்தி பல இலட்­சங்­களை காக்கிச் சட்­டைக்­கா­ரர்களாய் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தி கப்­ப­மாக பெற்ற இந்த குழு­வி­ன­ருக்கு எதி­ராக விசேட விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

மேல் மாகா­ணத்தின் தெற்கு பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமித் எதி­ரி­சிங்­கவின் ஆலோ­ச­னைக்­க­மைய மிரி­ஹான விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிமல் கருணாரத்ன உப பொலிஸ் பரிசோதகர் ஹேமன்த குமார சார்ஜன்டுகளான சான்த லக் ஷ்மன், வங்ஷஜய பியல், கான்ஸ்டபிள்களான பிரசன்ன அமரகீர்த்தி கிஹான், அனில், லோரன்ஸ் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளில் ஈடுபட் டிருந்தனர்.

எம்.எப்.எம்.பஸீர்Post a Comment

Protected by WP Anti Spam