குரோஷியாவில் ஒரே பாலின திருமணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

Read Time:2 Minute, 0 Second

homo-001ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை ஒருசில நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடான குரோஷியாவில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று 2003ல் சட்டம் இயற்றப்பட்டது.

அதேசமயம் தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில், திருமணம் செய்வதற்கான எந்த வரையறையும் இல்லை.

இந்நிலையில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி தடை செய்வதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திருச்சபை ஆதரவு குழுவினர் ஆதரவு திரட்டி வந்தனர்.

இதனை மனிதஉரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், நேற்று பொதுமக்களிடம் இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை ஆதரித்து 65.76 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மொத்தம் உள்ள 151 பாராளுமன்ற உறுப்பினர்களில் 104 பேரும் இதனை ஆதரித்து வாக்களித்துள்ளனர். 26.75 சதவீத வாக்குகள் ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக இருந்தன.

ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக அதிக வாக்குகள் பதிவாகியிருந்ததால், குரோஷியாவில் விரைவில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்
Next post பொலிஸ் தம்பதி கொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி