பண்ருட்டிக்கு மனம் பதைக்கிறது! விஜயகாந்துக்கு கை துடிக்கிறது!!

Read Time:4 Minute, 0 Second

ind.panrutti-2தே.மு.தி.க.-வில் விஜயகாந்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக விரைவில் கட்சியில் இருந்து விலகிவிடுவார் என ஊகிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், “உடல் நிலை சரியில்லை என்பதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனவே, தே.மு.தி.க. கட்சி பொறுப்புகள், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று நேற்று திடீரென அறிவித்தார்.

அறிவிப்போடு நின்றுவிடவில்லை அவர். தமது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் வழங்கினார்.

தே.மு.தி.க. அவைத் தலைவரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பண்ருட்டி ராமச்சந்திரன், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜயகாந்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. ஆனால், மறைமுகமாக தமது குமுறலை வெளியிட்டார்.

தமது பதவி விலகல் பற்றி தெரிவித்த அவர், “இது திடீர் முடிவு அல்ல; திட்டமிட்ட முடிவுதான். நான் விலகுவதால், தே.மு.தி.க.வுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. அதனால், விஜயகாந்த்துடன் இதுபற்றி விவாதிக்கவில்லை” என்றார்.

எனவே, விஜயகாந்துக்கு தெரிவிக்காமலேயே விலகிக் கொண்டார்.

விஜயகாந்த் பற்றி கருத்து தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “இது என் கட்சி; நான்தான் நடத்துவேன் என, விஜயகாந்த் கூறி விட்டார். ‘ஓட்டு கிடைக்காது; டில்லி தேர்தலில் போட்டியிட வேண்டாம்’ என்று சொன்னேன்; விஜயகாந்த கேட்கவில்லை. தலைவர் என்ற முறையில் அவர் முடிவு எடுத்து விடுகிறார். விஜயகாந்த்தை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர். இல்லை என்றால், நான் இல்லை” என்றார்.

விஜயகாந்துடன் தாம் இல்லாவிட்டால், தமக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்பதையே அவ்வாறு கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தே.மு.தி.க.வில் இருந்து விலகிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், ‘எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கட்சியில் ஏற்பட்டுள்ளது’ என, சொல்வது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது; அவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை” என்றார்.

மொத்தத்தில், கட்சிக்குள் இருக்க முடியாமல் வெளியேறிவிட்டார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஜயகாந்த்திடம் சொல்லாமலேயே கட்சியில் இருந்து துண்டை உதறி கிளம்பி விட்டதாக இவர் சொன்கிறார். இவர் வெளியேறிவிட்ட தகவல் கிடைத்ததும் என்ன நினைத்திருப்பார்.. ‘கோபத்தில் கையை காலை தூக்கும்’ விஜயகாந்த்?

“சுவத்துக்கு வெள்ளையடிச்சா அச்சா.. சுவத்தில காலை வெச்சு பண்ருட்டிக்கு அடிச்சா… பகுத் அச்சா” (கேப்டன் டில்லி ரிட்டர்ன் என்பதால் ஹிந்தி மிக்ஸ்)

ind.panrutti-2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் நெருக்கடியில்..
Next post மண்டேலா நினைவு கூட்டத்தில்: ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்..!