சிரியாவில் விசாரணை காவலின் போது மரணம் அடைந்த, இந்திய டாக்டரின் பிரேதம் இங்கிலாந்து வந்தடைந்தது

Read Time:6 Minute, 5 Second

011சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

சுமார் 10 லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அரசு படையினரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த மக்களுக்கு மனித நேய அடிப்படையில் அவசர ஆபரேஷன் செய்து சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்தில் டாக்டராக பணியாற்றும் இந்திய வம்சாவழியினரான ஷா அப்பாஸ் கான் என்பவர் கடந்த ஆண்டு சிரியாவில் உள்ள அலெப்போ நகருக்கு சென்றார்.

அவர் அங்கு சென்று சேர்ந்த 48 மணி நேரத்தில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் படைகள் அவரை சுற்றி வளைத்து கைது செய்து ராணுவ சிறையில் அடைத்தது. மகனை பற்றி பல நாட்களாக எந்த தகவலும் கிடைக்காததால் அவரை தேடி அவரது தாயார் பாத்திமா இங்கிலாந்தில் இருந்து அலெப்போ நகருக்கு சென்றார்.

கடந்த 4 மாதங்களாக அலைந்து திரிந்து ஷா அப்பாஸ் கான் பற்றிய தகவல்களை சேகரித்த பாத்திமா, டமாஸ்கஸ் ராணுவ சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் தேசிய பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரகசிய இடத்தில் தற்போது அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, சிரியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியை பாத்திமா நாடினார். இதற்கிடையில், ஷா அப்பாஸ் கான் இந்த வார இறுதியில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவரை பாத்திமா சந்திக்கலாம் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் ஓராண்டு பிரிவிற்குப் பிறகு மகனை சந்திக்கும் ஆசையில் கடந்த வாரம் டமாஸ்கஸ் நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தலைமையகத்திற்கு பாத்திமா சென்றார்.

அங்குள்ள அதிகாரிகளிடம் மகனை பார்க்க வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், சிறைக்குள் தனது பைஜாமா நாடாவில் தூக்கிட்டுக் கொண்டு ஷா அப்பாஸ் கான் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல காலம் அலைந்து தேடி அன்பு மகனை சந்திக்க பாசத்துடன் வந்த பாத்திமா, அதிகாரிகள் கூறிய தகவலை கேட்டு கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான டாக்டர் ஷா அப்பாஸ் கான், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணராக இங்கிலாந்தில் உள்ள ராயல் நேஷனல் மூட்டு சிகிச்சை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 10 நாட்களுக்கு பிறகு டாக்டர் ஷா அப்பாஸ் கானின் பிரேதம் இன்று இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரது குடும்பத்தாரிடம் பிரேதம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.

இவரைப் போலவே போரில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிப்பதற்காக கடந்த ஆண்டு சிரியாவிற்கு சென்ற இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவழியினரான டாக்டர் இசா அப்துர் ரஹ்மான் என்பவரும் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி!
Next post கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்