கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்
கவுதமியுடன் சேர்ந்து வாழ் வது ஏன் என்றதற்கு முதல்முறையாக பதில் அளித்திருக்கிறார் கமல்ஹாசன். சரிகா பிரிவுக்கு பிறகு கவுதமியுடன் சேர்ந்து வாழ்கிறார் கமல்ஹாசன்.
இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கின்றனர். கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது பற்றி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பதில் அளித்தார் கமல். அவர் கூறியது:
தேவைப்படும்போது நட்பை பயன்படுத்திக்கொண்டு பிறகு வேண்டாம் என்று சொல்வது தவறு. அது நல்ல நட்புக்கு அழகில்லை.
கவுதமி என் கூடத்தான் இருக்கிறார். அவரது கவலைகளை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அவருக்கு பாசத்தையும், சந்தோஷத்தையும் நான் தருகிறேன்.
வேதனையிலும் பங்கெடுக்கும்போதுதான் பந்தம் பலப்படும். மனதுக்கு பிடித்த ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது? விமர்சனம் செய்கிறவர்களுக்கு அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.
மன ஒற்றுமையோடு சேர்ந்து வாழ¢கிறவர்களுக்கு அது சரி என்றால் மற்றவர்கள் அதை ஏன் எதிர்க்க வேண்டும்?. இவ்வாறு கமல் கூறினார்.
Average Rating