வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை
Read Time:1 Minute, 15 Second
கொழும்பு மத்திய தபாலகத்தில் இருந்து பதுளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தபால் பொதிகள் மூன்று வீதியில் கிடந்தமை குறித்து விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி 21ம் திகதி பயணித்த வேனில் இருந்த தபால் பொதிகள் மூன்றே இவ்வாறு ஹங்வெல்ல பிரதேச வீதியில் கிடந்துள்ளன.
இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, விசாரணை அறிக்கை இன்று (24) தன்னிடம் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating