யாழ். சாவகச்சேரி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Read Time:1 Minute, 18 Second

accident.-01யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், அதே திசையில் பயணித்த பாதசாரி வீதியை கடக்கமுற்பட்டபோது மோதியதில் இவ் விபத்து (23) நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சின்னப்பு அருளப்பு என்ற 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசாதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அந்நபர் இன்று (24.12) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவுதமியுடன் சேர்ந்து வாழ்வது ஏன்? முதல்முறையாக கமல் விளக்கம்
Next post வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை