கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து
குவைத் நாட்டை சேர்ந்த இளம் பெண், திருமணம் ஆகி, ஒரே வாரத்தில், தன் கணவரின், மேஜை நாகரிகக் குறைபாட்டால், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
அந்த இளம் பெண், விவாகரத்து கோரி கொடுத்த விண்ணப்பத்தில், கணவர் உணவு உண்ணும் ஸ்டைல் தனக்குப் பிடிக்காததே, விவாகரத்துக்கு காரணம் என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அப்பெண் தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: எனக்கு திருமணம் ஆகி, ஒரு வாரமே ஆகிறது. என் கணவர், நாகரிகமற்ற முறையில் உணவு உண்பதை பழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவரின் நாகரிகமற்ற செயல்பாடுகள், என்னை மிகவும் வெறுப்படையச் செய்துள்ளன. இதனால் இருவரும், அடிக்கடி வாக்குவாதம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நான் என் கணவரை விவாகரத்து செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அப்பெண் தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரபு நாடுகளில், வித்தியாசமான காரணங்களுக்காக, தம்பதியர் விவாகரத்து பெறுவது அதிகரித்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Average Rating