பூனை மாமிச கடை சீன நகரில் மூடல்

Read Time:57 Second

Cat^s.jpg சீனாவின் ஷென்ஜன் நகரில் பூனை மாமிச கடை ஒன்று பலத்த எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. சீனாவில் குறிப்பாக தென்பிராந்தியத்தில் மக்களின் மிக விருப்பமான உணவில் ஒன்றாக பூனை மாமிசம் உள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஷென்ஜன் நகரில் பூனை மாமிசம் விற்கும் ஒரு கடையை பிராணிகள் நல ஆர்வலர்கள் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். “பூனையும் நாயும் மனிதர்களின் தோழர்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் பொருளாதார தடை : ஜப்பான்
Next post நோர்வே சேதுவின் குடும்பத்தில் பிளவு??