கணவருக்கு பிடித்த நடிகை போல, மாற நினைத்த மனைவியின் சோகக் கதை
Read Time:1 Minute, 7 Second
சௌதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப, நடிகை போலவே, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் மனைவி.
இதனால், கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று நினைத்தார் மனைவி, ஆனால், மனைவியின் மாற்றத்தை வெறுத்த கணவர், அவளை விவகாரத்து செய்துவிட்டு உடனடியாக வேறொரு திருமணம் செய்து கொண்டிருப்பது அவளை பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
Average Rating