புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை!!

Read Time:4 Minute, 15 Second

ltte_uruthirakumar2-001புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 16 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.

இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா, பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்கும்.

வெளிவிவகார அமைச்சு ஜி.எல் பீரிசினால் முழு விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடை செய்யப்படுகின்றன. இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.

முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:
1. நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2. கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3. விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4. விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள இயக்கங்கள்

1.தமிழீழ விடுதலை புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழ் மன்றம்
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழ் மன்றம்
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞ்சர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் கூட்டம்
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையை பிடித்து இழுத்த பிக்கு கைது
Next post கோபி உள்ளிட்ட குழுவை கைது செய்ய, மேலதிக பொலிஸ் குழு