பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையை பிடித்து இழுத்த பிக்கு கைது
Read Time:1 Minute, 9 Second
பட்டப்பகலில் பொது இடத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த பிக்கு ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கண்டி மத்திய சந்தை கட்டிடத்திற்கு முன் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருந்த கண்டி பொலிஸ் நிலைய பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கையையே இவர் பிடித்திழுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய போது அவர் மெனிக்கின்ன பிரதேச விகாரை ஒன்றினைச் சேர்ந்த பிக்கு என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating