சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..!

Read Time:8 Minute, 4 Second

pungudu.aa002**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.

**அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக,

சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக,

இம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் “தனது குடும்பத்தின் சார்பில்” சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப் படவில்லை.)

அடுத்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான செயற்திட்டங்களாக:-…

1. “புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு” ஒன்றினை நிர்மாணிப்பது…

அதாவது, ஏற்கனவே எமது நிர்வாகத்தில் கதைத்ததற்கு அமைவாக, புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதற்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தால் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இதனை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் பொறுப்பேற்றிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எனவே இதற்கமைய புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதென தீர்மானிக்கப்படுகின்றது.

2. “புங்குடுதீவு பஸ் தரிப்பிடங்களில் நிழற்குடைகளை அமைப்பது”,…

அதாவது, புங்குடுதீவில் உள்ள சகல பஸ் தரிப்பிடங்களிலும் அவ்வப் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டிலுள்ள குறிப்பாக, சுவிஸிலுள்ள உறவினர்கள்; தமது தாய், தந்தை மற்றும் உறவுகளின் நினைவாக நிழற்குடையை அமைப்பதற்கு முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வது.

அவ்வாறு அவர்கள் முன்வரும் பட்சத்தில் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் அதனை முன்நின்று செயற்படுத்தும். அவ்வாறு முன்வருவோர் யாருடைய பெயரால் அந்த நிழற்குடையை அமைக்கிறார்களோ அவரது ஞாபகார்த்தமாக அவருடைய பெயரில் அந்த நிழற்குடையை அமைப்பது. அதேபோன்று இதனை அமைப்பதற்கு உதவி புரியும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து என்னும் பெயரையும் கீழே பதிவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

இந்த நிழற்குடை அமைக்கும் திட்டத்தின் போது, ஒரே இடத்தில் நிழற்குடை அமைப்பதற்கு, பலர் கோரிக்கை விடுத்து பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் அதனைக் “குலுக்கள் முறையின் மூலம்” தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

3. “முக்கியமான சந்திகளில் பொது மலசலகூடம்” அமைப்பது,..

அதாவது. புங்குடுதீவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியும், புங்குடுதீவின் ஊடாக ஏனைய தீவுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களினதும், புங்குடுதீவு வாழ் மக்களினதும் நலன் கருதியும் முதல்கட்டமாக புங்குடுதீவின் முக்கியமான ஐந்து அல்லது ஆறு சந்திப்புகளில் (சந்திகள்) மலசலகூடம் அமைப்பதென தீர்மானிக்கப்படுகின்றது. இதற்காக திட்டமொன்றினை முன்னெடுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

(இதன் முதல்கட்டமாக மடத்துவெளிசந்தி, ஆலடிச்சந்தி, சந்தையடி, பெருங்காட்டு சந்தி, தம்பர் கடைச்சந்தி (இறுப்பிட்டி), குறிகட்டுவான் துறைமுகம் ஆகிய பகுதிகளை தெரிவு செய்துள்ளோம். இவை காலப் போக்கில் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.)

4. “பொதுக் கிணறுகள், குளங்களை துப்புரவு செய்தல் புனரமைத்தல்”…

அதாவது, அனைத்துப் பொதுக் கிணறுகளையும், தூர்வாரி துப்புரவு செய்வதுடன், அவற்றைப் புனரமைப்பது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சுவிஸில் வாழும் மக்களிடம் ஆலோசனையும், நிதியுதவியும் பெற்று அதனை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

இதேபோன்று அனைத்துக் குளங்களையும் கட்டம் கட்டமாக தூர்வாரி துப்புரவு செய்து, புனரமைப்பது. இதற்கும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுவிஸில் வாழும் புங்குடுதீவு மக்களின் நிதியுதவி பெற்று அவற்றை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது,

எனவே, சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகம் பூராவும் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவருக்கும் இதன்மூலம் தெரியப்படுத்துவது யாதெனில், இது குறித்த தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தயவுசெய்து கூடிய விரைவில், எமக்கு எழுத்து மூலமோ, அன்றில் தொலைபேசி மூலமோ தெரியப் படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில், உங்களின், ஆலோசனைகள், கருத்துக்கள், பங்களிப்புகளின் மூலம் “புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்குமான எமது செயற்பாடுகளை” நாம் முடிந்தவரை துரிதகதியில் முன்னெடுக்க உதவுங்கள்!!

இவ்வண்ணம்,
நிர்வாகசபை
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து

இதுகுறித்த தொடர்புகளுக்கு…
இ.ரவீந்திரன், (தலைவர்)
079.2187075
சுவிஸ்ரஞ்சன் (உபதலைவர்)
077.9485214

மின்னஞ்சல்…
[email protected]

pungudu.swi-001

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, இளைஞனுக்கு விளக்கமறியல்
Next post புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே, கைது செய்யப்பட்டார் -பொலிஸ் பேச்சாளர்!