விபூசிகா பாலேந்திரா மற்றும் தாயார் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு

Read Time:2 Minute, 26 Second

004bதடுத்து வைக்கும் உத்தரவின்றி கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயாரும், மகளும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில், விடயங்களை உறுதிப்படுத்துவது எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பாலேந்திரா ஜெயகுமாரி மற்றும் அவரது 15 வயதான மகள் விபூசிகா பாலேந்திரா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டதன் மூலம் தமது மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து, அவர்கள் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பாலேந்திரா ஜெயகுமாரி தற்போது பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகள் பாலேந்திரா ஜெயகுமாரி நன்னடத்தைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாதுள்ள தடுத்துவைக்கும் உத்தரவினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆயினும், நீதிபதியினால் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது போயுள்ளதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவிய, சுவிஸ் வாழ் திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பத்தினர்..!
Next post குவைத்தில் கொலைச் சம்பவம்; இலங்கைப் பெண் கைது