2-வது சுற்றில் சுவிட்சர்லாந்து 26-ந்தேதி உக்ரைனுடன் மோதல்
ஜி பிரிவில் நடந்த மற்றொரு கடைசி லீக் ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து-தென் கொரியா அணிகள் மோதின. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று இருந்தது. இதனால் இரண்டு அணிக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 23-வது நிமிடத்தில் சுவிட்சர் லாந்து முதல் கோலை போட் டது. அந்த அணியின் பிளப்பி சென்டராஸ் தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். அப்போது அவர் தென் கொரியா வீரர் சோச்சினுடன் தலையால் பயங்கரமாக மோதினார். இதனால் சென்ட ராசுக்கு நெற்றியில் ரத்தம் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந் தார். இந்த கோலின் மூலம் சுவிட் சர்லாந்து முதல் பாதியில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
77-வது நிமிடத்தில் அந்த அணியின் பிரி அலெக்சாண் டர், மார்கைராஸ் கொடுத்த பாசை அபாரமாக பெற்று கோல் அடித்தார். எவ்வளவோ போராடியும் தென் கொரிய வால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதனால் 2-0 என்ற கணக்கில் சுவட்சர்லாந்து வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த தென் கொரியா ஏமாற்றத்துடன் போட்டியில் இருந்து வெளியேறியது. சுவட் சர்லாந்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 7 புள்ளிகளுடன் அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.
சுவிட்சர்லாந்து அணி தனது 2-வது சுற்றில் வருகிற 26-ந்தேதி உக்ரைனுடன் மோது கிறது. இந்த ஆட்டம் கோலோக் நியாலில் நடைபெறுகிறது.