உண்ணாவிரதத்தை சதாம்உசேன் முடித்துக்கொண்டார்
Read Time:58 Second
வக்கீல் கமீஸ் அல் ஒபைதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயிலில் சதாம்உசேன் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை நேற்றுமுன்தினம் பகல் அவர் முடித்து கொண்டார். இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சதாம்உசேனுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த அவரது ஆட்சிக்கால அதிகாரிகளும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். சதாம்உசேன் கடந்த 21-ந் தேதி மாலையில் இருந்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். 22-ந் தேதி காலையும் பகலும் அவர் சாப்பிடவில்லை. 22-ந் தேதி மாலை தான் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு சாப்பிடத்தொடங்கினார்.