கால் இறுதி ஆட்டம் ஜெர்மனி- அர்ஜென்டினா 30-ந்தேதி மோதல்

Read Time:2 Minute, 13 Second

W.Football1.jpgஉலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன் தினத்துடன் `லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. இதன் முடிவில் ஜெர்மனி, ஈக்வடார் (ஏ பிரிவு), இங்கிலாந்து, சுவீடன் (பி), அர்ஜென்டினா, ஆலந்து (சி), போர்ச்சுக்கல், மெக்சிகோ (டி), இத்தாலி, கானா (இ), பிரேசில், ஆஸ்திரேலியா (எப்), சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் (ஜி), ஸ்பெயின், உக்ரைன் (எச்) ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற றன. போலந்து, கோஸ்டாரிகா, பராகுவே, டிரினிடாட், ஐவரி கோஸ்ட், செர்பியா, ஈரான், அங்கோலா, செக் குடியரசு, அமெரிக்கா, ஜப்பான், குரோஷியா, தென் கொரியா, டோகா, சவுதி அரேபியா, உக்ரைன் அணிகள் வெளி யேற்றப்பட்டன. 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் ஜெர்மனி 2-0 என்ற கணக்கில் சுவீடனையும், அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் மெக்சி கோவையும் தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் கால் இறுதியில் மோதுகின்றன. இந்த ஆட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. உலககோப்பையில் இரு அணிகளுமே பரம்பரை எதிரிகளாகும். 1986-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியது.

1990-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்று ஜெர்மனி பழி தீர்த்துக் கொண்டது. அதற்கு பிறகு தற்போதுதான் உலககோப்பையில் இரு அணிகளும் மோத உள்ளன. இதனால் இந்த கால் இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதி
Next post 158 கிலோ எடையுள்ள திருமண உடை