158 கிலோ எடையுள்ள திருமண உடை

Read Time:1 Minute, 11 Second

Wedding.Dress.jpgஇங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கர்லி ஓபிரியன். 16 வயதான இவருக்கும், 17 வயதான மைக்கேல் சாபேக்கும் குளோசெஸ்டர் நகர தேவாலயத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது 158 கிலோ எடையுள்ள உடையை மணமகள் கர்லி அணிந்து இருந்தார். 8 அடி அகலமும், 60 அடி நீளமும் உள்ள இந்த உடையின் விலை 17 லட்சம் ரூபாய் ஆகும். 30 அடுக்குகளை கொண்ட அந்த உடையில் 3 ஆயிரம் கிரிஸ்டல் கற்கள் இருந்தன. இந்த உடையை அணிந்து கொள்ள கர்லிக்கு 9ஷி மணி நேரம் ஆனது. இதனால் களைத்துப்போன அவரை மணமகனும், 14 உறவினர்களும் சேர்ந்து தூக்கிக் கொண்டு வர வேண்டியதாகி விட்டது. உடையுடன் அவரால் தேவாலயத்துக்குள் நுழைய முடியவில்லை. 20 பேர் 1ஷி மணி நேரம் படாதபாடுபட்டு அவரது உடையை தேவாலயத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கால் இறுதி ஆட்டம் ஜெர்மனி- அர்ஜென்டினா 30-ந்தேதி மோதல்
Next post காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தது