உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தார் ரொனால்டோ

Read Time:2 Minute, 54 Second

Ronaldo.jpgபிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. 1998-ல் முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் களம் கண்ட ரொனால்டோ, அந்த போட்டியில் 4 கோல்கள், அதற்கு அடுத்து நடந்த 2002 உலக கோப்பை போட்டியில் 8 கோல்கள் என மொத்தம் 12 அடித்து இருந்தார். எனவே உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ள ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லரின் (14 கோல்கள்) உலக சாதனையை ரொனால்டோ இந்த உலக கோப்பையில் தகர்த்தெரியவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உலக கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் மட்டமாக ஆடியதால் ரொனால்டோ உலக சாதனை படைப்பது கேள்விக்குறியானது. ஆனாலும் சிங்கமாய் சிலிர்த்தெழுந்த ரொனால்டோ ஜப்பானுக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் மீண்டும் விசுவரூபம் எடுத்து அற்புதமாக ஆடினார். இந்த ஆட்டத்தில் அவர் 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 14 கோல்களை அடித்து, முல்லரின் உலக சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ. எனவே கானாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் அவர் அதிக கோல்களை அடித்து உலக சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்ததுபோல் கானாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் அவர் 5-வது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்து ரொனால்டோ புதிய உலக சாதனை படைத்தார்.

உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்துள்ளவர்களில் முதல் 5 இடங்களில் இருக்கும் வீரர்களின் விவரம் வருமாறு:-

1.ரொனால்டோ (பிரேசில்) 15 கோல்கள்

2.ஜெர்ட் முல்லர் (ஜெர்மனி) 14 கோல்கள்

3.ஜஸ்ட்பான்டைன் (பிரான்ஸ்) 13 கோல்கள்

4.பீலே (பிரேசில்) 12 கோல்கள்

5.சான்டோர்கோசிஸ் (அங்கேரி) 11

கிளின்ஸ்மேன் (ஜெர்மனி) 11

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலக கோப்பை கால்பந்து: கானாவை தோற்கடித்து பிரேசில் கால் இறுதிக்கு தகுதி
Next post ராஜீவ் கொலை: முதல் முறையாக ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்த விடுதலைப் புலிகள்!