சதாம்உசேனின் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அமெரிக்க வக்கீல் கோரிக்கை

Read Time:2 Minute, 49 Second

Irak1.jpgஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் வழக்கில் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் சார்பாக ஆஜராகும் வக்கீல்களுக்கு அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அவருக்காக ஆஜரான அமெரிக்க வக்கீல் ரம்சே கிளார்க் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சதாம்உசேனை கொல்ல நடந்த முயற்சி தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து துஜயில் என்ற கிராமத்தைச்சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்களை சதாம்உசேன் சித்ரவதை செய்து கொல்ல உத்தரவிட்டார் என்று அவர் மீதும் அதை செயல்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் 7 பேர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனிக்கோர்ட்டில் நடந்து வரும் இந்த விசாரணையில் அவர் சார்பாக ஆஜரான வக்கீல்களில் 3 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டு உள்ளனர். எனவே அவர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று சதாமின் வக்கீல் ரம்சே கிளார்க் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விசாரணையில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்காவிட்டால் விசாரணை நியாயமாக நடக்க சாத்தியம் இல்லை. அந்த பாதுகாப்பையும் அமெரிக்காவால் மட்டும் தான் தரமுடியும்.

சதாமின் வக்கீல்களுக்கு பாதுகாவலர்களை அமெரிக்கா நியமிக்கவேண்டும். வக்கீல்களின் குடும்பத்தினரை ஈராக்குக்கு வெளியே அனுப்பிவிடவேண்டும். இது போன்ற பாதுகாப்பு இல்லாமல் நடத்தப்படும் விசாரணை வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்கமுடியும். அது நீதியின் மீது படிந்த கறை ஆகும்.

எங்கள் ஆதரவு சாட்சிகளும் மிரட்டப்படுகிறார்கள். சதாமின் வக்கீல்கள் கோர்ட்டில் சிறப்பாக செயல்படவும் அனுமதிக்கப்படுவதில்லை. சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்தவும் போதுமான அவகாசம் தருவதில்லை.

இவ்வாறு ரம்சே கிளார்க் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்
Next post ராஜீவ் கொலை சதி விவரங்களை பிரபாகரன் வெளியிடவேண்டும் நீதிபதி ஜெயின் பேட்டி