கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்…!!

Read Time:1 Minute, 59 Second

downloadவெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன.

* தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும் பிசுக்கும்சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகி விடும். தலை சுத்தமாக இருந்தால்தான் சருமத்தின் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய் பசை இருப்பது போல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடு செய்ய ஒரு ஸ்பெஷல் சீயக்காய் பவுடர் இருக்கிறது.

சீயக்காய்-கால் கிலோ,
பயறு- கால் கிலோ,
வெந்தயம்- கால் கிலோ,
புங்கங்கொட்டை- 100 கிராம்,
பூலான் கிழங்கு – 100 கிராம்…

இவற்றை நன்றாக மெஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது தான் அந்த ஸ்பெஷல் சீயக்காய் பவுடர். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்காய் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகி விடும். தோலின் எண்ணெய் பசை ஓரேயடியாக ஓடிப்போகாமல், கருமையும் மறையத் தொடங்கும்.

* அடுத்ததாக கவனிக்க வேண்டியது. சருமம்! வெளியில் போவதற்கு முன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்து விட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!!
Next post அதிகாலையில் சாவு செய்தி சொல்வதா?: கணவன்–மனைவி உள்பட 6 பேருக்கு கத்திக்குத்து!!