திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நல அலுவலர் கைது!!
Read Time:1 Minute, 18 Second
சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியம் மின்னமலைப்பட்டியை சேர்ந்தவர் அழகன், விவசாயி. இவரது மகள் ஏகவள்ளி (வயது24). இவருக்கு திருமண உதவி பெறுவதற்காக எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையினரிடம் மனு அளித்து இருந்தார்.
திருமண உதவித்தொகை வழங்க கிராம நல அலுவலர் சின்னப்பொண்ணு (56) ஏகவள்ளியிடம் ரூ.1000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து ஏகவள்ளி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி அளித்த ரூ.1000–த்தை செவ்வாய்க் கிழமை எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து சின்னப்பொண்ணுவிடம் ஏகவள்ளி அளித்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சற்குணம், இன்ஸ்பெக்டர் பீட்டர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சின்னப்பொண்ணுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating